என் வளர்ச்சி பரிமாணம் அவருக்கு
வாரிசு தைரியத்தை தந்தது
வாரிசு தைரியத்தை தந்தது
மண்ணில் பிறந்து இன்னும்
தந்தை அந்தஸ்தை கொடுத்தேன்
தந்தை அந்தஸ்தை கொடுத்தேன்
கை பிடித்து அன்று என்னுடன்
அவரும் நடை பழகினார்
அவரும் நடை பழகினார்
என் சுட்டி சேட்டைகளை அன்று
ரசித்ததில் எத்தனை பெருமை
ரசித்ததில் எத்தனை பெருமை
இன்னும் அறிவுக்கு முதல் எழுத்தை
அறிமுகம் செய்து வைத்தவர்
அறிமுகம் செய்து வைத்தவர்
அவர் தோள்களுக்கு நான் என்றும்
சுமை அல்ல ! சுகம்தான் !!
சுமை அல்ல ! சுகம்தான் !!
தளராத அவரின் உழைப்பு அன்று
என் எதிர்காலம் எண்ணி மட்டுமே
என் எதிர்காலம் எண்ணி மட்டுமே
அப்பா என்றால் அன்பு என்பது
நான் அவரிடம் கண்ட உண்மை
நான் அவரிடம் கண்ட உண்மை
எனக்காக மட்டுமே மனது கனத்தது
நான் சிகரம் தொட வேண்டி
நான் சிகரம் தொட வேண்டி
உயர்ந்த நிலையில் நான் இன்று
வளைந்த தேகம் ! வளையாத பாசம் !!
என் அப்பா !
எனக்கு ஒரு பிதா மகன் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்