பொறுமை ஓன்று மறைந்தது
ஏகன் இறைவன் நாட்டப்படி
மர்ஹூம். ஒ .பி. இஸ்மாயில்
வயதோ முப்பத்தி மூன்று
தாயிக்கு இவன் தலை மகன்
தந்தைக்கு என்றும் பாசமலர்
தம்பிக்கு அன்பு அண்ணன்
தாரத்திற்கு நல்ல கணவன்
முத்தாய் பிறந்த மூத்த மகள்
பாசம் கொண்ட தகப்பனாய்
பொறுமையின் பொக்கிஷம்
பெருமை இல்லா தோற்றம்
இன்முகம் கொண்ட சிரிப்பு
பேச்சில் வந்த கண்ணியம்
படித்து பெற்றது பட்டங்கள்
உழைப்பில் இருந்த ஈடுபாடு
உடன் இருப்போரிடம் கனிவு
உதவும் மனம் தாராளம்
அன்பால் தாயுடன் பிணைப்பு
அறிவால் தந்தையுடன் பகிர்வு
அரவணைப்பு சொந்தங்கள்
பரிவாய் பந்தங்களோடு
ஏக்கத்தோடு உன் வாரிசு
என்ன கூற தெரியவில்லை
உன்னோடு வாழ்ந்த காலம்
நினைத்து இனி ஆறுதல்
கலங்கிய விழிகள் நாம்
கரம் ஏந்தி கேட்கின்றோம்
உன் மறுமை வாழ்விற்கு
துவாக இறைவனிடம் !
இறைவா !
இவருடைய எல்லா பாவங்களை
மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
என்னும் மேன்மையான சுவன பதவி
தந்தருள்வாயாக .....
ஆமீன் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்