தீபாவளி திருநாளாம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 19 December 2015

தீபாவளி திருநாளாம் !













நாளாம் நாளாம் திருநாளாம்
தீபாவளி இன்று திருநாளாம் ! 


தீப ஓளி இங்கு ஏக இல்லத்தில்
பிரகாசிக்கும் நன் நாளாம் !

வெடிகளின் முழக்கம் ஒரு புறம்
விடியும் வரை வெடித்திடும் !

புத்தாடை உடுத்தி மகிழ்ந்திடும்
பொன்னான இந்த தீப நாள் !

இதில் ஒருவரல்ல இருவரல்ல
உலகே போற்றி கொண்டாடிடும் !

நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை
அழித்து கொன்ற இந்த தினத்தினை

பார் முழுதும் போற்றி கொண்டாடிடும்
சந்தோசமாய்  குடும்ப சகிதமாய் 

இதை ஒருவரல்ல இருவரல்ல
உலகே போற்றி கொண்டாடிடும் !

நாளாம் நாளாம் தீபாவளி இன்று
தீபத் திருநாளாம் !

இதயம் கனிந்த என் வாழ்த்துக்களையும்
இணைத்துக்கொள்ளும் ................. 

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்