வாழும் உன் புகழ் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 23 December 2015

வாழும் உன் புகழ் !












வள்ளலாய் வாழ்ந்தது - உலகில்
இன்றும் வாழும் உன் புகழ் மங்காது !


தேடி வந்தவருக்கு முதலில் உணவளித்த
உன் கருணை உள்ளம் மனதில் வாழும் !

வள்ளலாய் வாழ்ந்தது சென்று - இன்றும்
குடையாக நிற்கும் உன் கொடை !

நீ சொன்னதை செய்தாய் - அன்று
சொல்லும் செயலாக அமைந்தது நன்று !

சிலரால் புரியமுடியவில்லை -மக்களால்
பாராட்டை பெற்றவன் நீ !

உன் பாடல் வரிகளில் உள்ள கருத்து
அதுதான் தமிழ் மக்களின் உறுத்து !

எல்லோர் மனதிலும் அபிமான நடிகனாக
மக்கள் உள்ளத்தில் நல்ல முதல்வராக !

நீ மருத்துவமனையில் இருந்தபோது
நொறுங்கிய உன் அபிமானிகள் !

உன் உயிர் பிரிந்த அன்று - தமிழகத்தில்
உறைந்துபோன மக்களின் மனது !

உன் வரலாறை எழுத வரிகள் இல்லை
இன்றும் உன் புகழ் மண்ணில் வாழும் !

எம் . ஜி . ஆர். ஆக வாழும் உன் புகழ் ! 

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்