அன்புக்கு தருவான் அல்வா
வம்புக்கு வந்தா அருவா
வம்புக்கு வந்தா அருவா
தெம்புக்கு தண்ணீ தாமிரபரணி
பண்புக்கு இந்த ஊர் மக்கள்
பண்புக்கு இந்த ஊர் மக்கள்
பேச்சுக்கு இதன் மண்வாசனை
மூச்செல்லாம் பிறந்த மண்ணு
மூச்செல்லாம் பிறந்த மண்ணு
உறவுக்கு என்றும் உண்மையா
உரிமைக்கு நல்ல தோழனா
உரிமைக்கு நல்ல தோழனா
புலியா சீருவான் இவன் வீரனா
புயலா வீசுவான் நல்ல இனமா
புயலா வீசுவான் நல்ல இனமா
காளைய அடக்கிற தனிபலம்
கன்னியர மதிக்கிற குணம்
கன்னியர மதிக்கிற குணம்
வீரம் கொண்ட பாசக்காரன்
வேசமில்லா ரோசக்காரன்
வேசமில்லா ரோசக்காரன்
நெல்லுக்கு வேலி அமைத்து
சொல் வந்த "திருநெல்வேலி"
சொல் வந்த "திருநெல்வேலி"
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்