தேடல்கள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 24 January 2016

தேடல்கள் !













மண மேடையில் ஜோடியாய்
இறைவன் தந்த விதித்தபடி


சந்தோஷம்பொங்கி தோள்
மீது தலைசாயும் நேரமிது

வான்மடி மேல் விடிவெள்ளி
இனி உலா வரும் நேரமிது

வலைக்கூந்தல் கை மீது
உறவாடும் நேரமிது

தண்டைகாலில் கொலுசு
ஓசை தரும் நேரமிது

கயிற்றுகட்டில் நிலாபார்த்து 
நாம் கையசைத்த நேரமிது

விடியலும் கடந்த நாட்களை 
அசை போடும் நேரமிது

விடுப்புமுடிந்து உனைபிரிய
மனமில்லா நேரமிது

ஆசைகோடி மனதில்மூடி என்
கனவு களையும் நேரமிது

என் தூக்கங்களில் ஏக்கங்களும்
உன் நினைவாய் தேடல்கள் !

கவிஞர்.இறைநேசன். 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்