உறவெல்லாம் ஒரு
நாள்
உணர்ந்து நீ!
தெளிவுபெற
மீதி வரும் நாள் கணக்கு
செல்வமும்,புகழும்
உலகில்
இறைவனாக தந்தது
உனக்கு
கவனம்,கண்ணியம்
கொண்டு
இது நிலைபெறனும்
உனக்கு
அன்பும்,அரவணைப்பும்
என்றும்
பிண்ணி பினையனும்
உனக்குள்
கொடை,தர்மம் கை விடாது-இது
மறுமையில் பரிந்துரைக்கும்
போலி பாசம் கண்டு
கொள்ள இனி
உனக்கு தெளிவான
மனது வேணும்
வேஷம் போட்டு
கண்ணீர் சிந்தி
காசு கறக்கும் போலி உறவுகள்
சொல்லி கொடுத்து
கேட்பதை நீ !
சொல்லாக்கி
நடப்பதை தவிர்த்திடு
சொந்த புத்தி
கொண்டு சிந்தித்து
இனி சுயமாக ஒரு முடிவெடு
உன்
குடும்பம்,உன் வாழ்க்கை
நீயே முடிவெடுக்க
தெரிந்து கொள்
உறவுகள் இதுதான் புரிந்து கொள்
மனிதரின் மனதை தெரிந்து கொள்
பணத்தை வைத்து பாசம் உன் மீது
இன்று உன் கஷ்டம் கேலி பேச்சு
ஆடிய
ஆட்டம் அடங்கும் ஒரு நாள்
இன்று அழுது புலம்பி என்ன பயன் ?
நீ ! ஒதுக்க நினைப்பவரை எல்லாம்
இறைவன்
உயர்த்திட ஒரு நொடி
நீ ! சொல்லால்
காயப்பட்டவர்அதிகம்
உன் மனமோ
காயப்படும் தினமும்
வீணாக பழி சொல்உடன் பிறப்புகள்
வேலையை
முடித்தது வெகு கச்சிதம்
வாக்கு கொடுப்பது விளையாட்டா ?
பொய் கூறி நடிப்பது வாடிக்கையா !
பாவங்களை
மன்னிப்பதில் கிருபையாளன் இறைவன்
அடியானுக்கு செய்த பாவங்கள் தவிர
பாதிக்கப்பட்ட அடியான் மன்னிக்காதவரை
இறைவனும் அவரை மன்னிப்பதில்லை !
எங்கே போனது செல்வம்
புகழ், மமதை, எங்கே!
ஆமாம்
போட்ட கூட்டம் ?
காலம் கடந்த மன்னிப்பு ஏதற்கு ? நீ !
நேசித்ததே சுமையாகும் உனக்கு !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்