அன்னக்கொடி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 17 August 2016

அன்னக்கொடி !

















இந்த கதையும் கதையில் வரும் கதாபாத்திரங்களும்
அனைத்தும் கற்பனையே ! யாரையும் எவர் மனதையும்
புண் படும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல – ஆசிரியர்.

அன்னக்கொடி உடன்பிறப்புகள்!

பாரசீக மன்னரின் சிற்றரசர்கள் பலர் இருந்தும் 
தன் நாட்டு குடிமகன் ஒருவரின் குண நலம் அறிந்து 

தனது செல்(ல)வ மகளை மணமுடித்து 
தர எண்ணி .....
திருமணமும் சீரும் சிறப்பாக நடந்தது

ராணி உடன் பிறந்த சகோதரர்கள் பலரில்
ஒருவர் மட்டும் சூழ்ச்சிக்கு சொந்தக்காரர் 

பாரசீக மன்னருக்கு மகள் மூலம் வாரிசு இல்லை என்ற ஏக்கம் போக்க பெண் மகளாய் பிறந்தவள் !

அன்னக்கொடி பெயரை பொருந்திய மூத்த மகள்
இவள் மன்னரின் ஆலோசனைகளில் முக்கிய பங்கு

மன்னரும் முக்கிய முடிவுகளை எடுக்க
தன் மகள் அன்னக்கொடியுடன் ஆலோசிப்பது உண்டு

மன்னரின் ஆண் வாரிசாக வந்த முதல் இளவரசர் 
ஊமையனுக்கு கம்பன் உளறுவாயன் என்ற பாணி !

இரண்டாவது இளவரசர்  இனி தனக்கு என்றால் சாதகமாகவும்
மற்றவறுக்கு பாதகமாகவும் பேசும் 
குணம் கொண்டவர் 

மூன்றாவது இளவரசர் மன்னருக்கும், ராணிக்கும் ஏற்றவாறு 
நடிக்கும் கலையால் அவர்களை 
நம்பவும் வைத்தவர் 

நான்காவது இளவரசர் சான்றோர் ஆனாலும் 
தனக்கல்ல எதுவும் ஊருக்குதான் உபதேசம் என்ற பாங்கு

ஐந்தாவதாய் வந்த பெண்மகள் இனி
தன் காரியம் நடக்கும் வரை கனிவை கொட்டும் குணம் 

ஆறாவதாக வந்த இளவரசர் ஆள்வான் என்றால்
அவன் எண்ணமும்,செயலும் சரியில்லா குணம் கெட்டவன் 

ஏழாவதாக வந்த இளவரசருக்கோ பதவிக்கு ஆசை இல்லை
அரண்மனையை கட்டி ஆள வேண்டும் என்ற எண்ணமே இருந்தது

எட்டாவதாக வந்த இளவரசர் மன்னர் பாசத்தை பெற்று 
பின்பு மன்னரையே நம்ப வைத்து ஏமாற்றிய தீரன்

ஒன்பதாவது இளவரசி சக்கையாக 
மன்னர்,ராணிக்கு “பாச மலர்” என்ற 
பெயர் மட்டும்

அன்னக்கொடியுடன் நவக்கிரகங்களாக வாரிசுகள் இருந்தும் 
மறைந்த மன்னர் எண்ணம்,செயல்கள் யாரிடமும் இல்லை 

மன்னரின் சொத்துக்கள் மேல்தான் எல்லோருக்கும் ஒரு கண் 
இருந்தது என்பதே உண்மை!

மன்னர் மறைவிற்கு பின் இந்த சாம்ராஜ்யம் !  இன்று
உடைந்த கண்ணாடி போல் 
சிதறிய நிலையில் .......... 

இன்று ! அரண்மனை யாருக்கு என்ற எண்ணத்தில்
போட்டியாக மன்னர் சொத்தை எதிர்நோக்கி .......

அன்னக்கொடியுடன் நவ கிரகங்களும் அரண்மனை-
நோக்கி பங்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு !

நீதி மானாக வாழ்ந்த மன்னரின் புகழ் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டது அவரோடு ......

இந்த நவகிரகங்கள் பெருமையாக
பீத்திக் கொள்ள ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை ! 

வாழ்ந்தது ஒரு சரித்திரம் அன்று !
வீழ்ந்தது அவர் பெயரோ இன்று ! 

உள்ளதை உள்ளபடியாக .....

கவிஞர்: இறைநேசன்.





No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்