ஆதவனின் உதயமிது
அதிகாலை நேரமிது
பறவைகள் பறந்து இனி
உலாவரும் நீலவானம்
மண்வாசனை முகர்ந்து
அசைந்தாடும் பயிர்கள்
ஒடை நீரின் சலசலப்பு
ஒய்யாரமாய் அசைந்து
வயல்வெளியின் பசுமை
இயற்க்கையின் உவமை
கற்பனையில் வாழ்ந்து
கடந்து போன விவசாயம்
மரங்களை வெட்டி வீழ்த்தி
மழை பெய்யவழியில்லை
நீர் நிலைகள் ஆக்கிரமித்து
அடுக்கு மாடி கட்டிடங்கள்
தூர் வாராத கண்மாய்கள்
மழை நீர் சேமிக்கவில்லை
அமலை செடி ஆக்கிரமிப்பு
உபரி நீரோ கடலில் கலப்பு
பருவம் தவறியது மழை
நீராதாரம் போதவில்லை
நிலத்தடி நீரோ இறங்கி
கொண்டு போகிறது
முல்லைபெரியார் முடிந்து
போன வரலாறு
காவிரியும் கை விட்டது
டெல்டா விவசாயம் டெட்
மேலாண்மைக்கு தகராறு
வேலாண்மை கருகுகிறது
நாலு போகம் விளஞ்சா
இனி கஞ்சியாவது மிஞ்சும்
இறைகருணை மழை தர
கூட்டாக வேண்டுவோம்
கருத்து போன கனவுடன்
கருத்தம்மா விவசாயம் !
கவிஞர். இறைநேசன்

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்