முக்கடல் சங்கமிக்கும்
இந்த "கன்னியாகுமரி"
ஆதவன் உதயம் இங்கே
அழகிய ஒளி சிதறல்கள்
அந்தி மாலை பொழுதின்
அஸ்தமனமாகும் சாட்சி
சுற்றுலா தளங்களில் இது
பாரம்பரியமிக்க பெறுமை
கரைகளை தாலட்டும் இனி
அலைகளின் ஒசை
பாறைகளில் நுரை ததும்பும்
கண்கொள்ளா காட்சி
கட்டு மரங்ள் உயர்தெழுந்து
பரந்த கடல் மீது பயணம்
நெஞ்சில் உரம் கொண்டு
மீனவன் நிற்கும் வீரம்
கண் கண்ட தூரம் வரை
இது கடல் அண்னை ஆட்சி
தரை தட்டும் கரைவரை வரும்
கப்பல்கள் அணிவகுப்பு
விவேகானந்தர் தியானித்த
பாறை மீது மணிமண்டபம்
வள்ளுவப் பெருந்தகைக்கு
வானுயர சிலை கம்பீரமாய்
ஆர்பரிக்கும அலைகளில்
இதமான படகு பயணம்
கடல் சிற்பியில் கைவிணகள்
கலை நயமிக்க ஆக்கங்கள்
முக்கடல் சங்கமிக்கும் இந்த
குமரியின் ஒர் அடையாளம் !
கவிஞர்.இறைநேசன்.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்