புத்தாண்டே 2016 வருக - நல்ல
புதுமைகளை கொண்டு தருக !
புதுமைகளை கொண்டு தருக !
கடந்த வருட நினைவோடு - புது
ஆண்டில் வசந்தத்தை தருக !
இனி காலமெல்லாம் வீசும்
வைகறை தென்றலாய் வருக !
இனிமையான ஆண்டாக 2016 ரை
எல்லோருக்கும் ஆக்கி தருக !
கோர விளைவுகளை தவிர்த்து
நல்ல நிகழ்வை கொண்டு தருக !
முடிவில்லா பிரச்சனைக்கு நல்ல
முற்று புள்ளி கொண்டு வருக !
வளமான பூமியாகவும் - நமது
பாரதத்தை செழிப்பாக்கி தருக !
புத்தாண்டே வருக !
புது வசந்தமே வருக !
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ......
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்