மழை வேண்டி பிராத்தனை
மனசெல்லாம்
வேதனை
ஆறுகளில் ஓடும்
தண்ணீர்
வீடுகளில்
பாய்ந்து கண்ணீர்
வரும் முன்
காப்பது அறிவுடமை
வந்த பின் நோவது
அறிவின்மை
நீர் நிலைகளை
காணவில்லை
ஏரியில் தூர்
வாரவும் இல்லை
தண்ணி போக
வழியுமில்லை
வெள்ளம் புகுந்து குளமாச்சு
வீட்டு பொருளும் வெள்ளத்தில்
கோடீஸ்வரனும் தெரு வீதியில
வாழ்க்கை முடங்கியது இருட்டுல
சோற்றுக்கு வழியின்றி மாடி மேல
மதங்களை கடந்த
மனித நேயம்
உதவிக்கரமாய்
உணவளித்தது
ஆம் !
கடந்தது
சரித்திரமில்லை !
காலம் தந்த
படிப்பினை !


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்