பொறுப்பு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 14 December 2015

பொறுப்பு !















படைத்து நம்மை பரிபாலிப்பவன்
அவன் அறியாதது ஒன்றுமில்லை !

மறைவானதை அறிந்தவன்
மறைக்கப்பட்டதை காண்பவன் !

தேவைகளை அறிந்தவனும் நமக்கு
ஆகுமானதையும் தெரிந்தவன் !

ஆகாததை விலக்கி அருள்பவன்
நமது எல்லா தேவைகளையும் !

அவனிடமே கேட்போம்
பொறுப்புகளை அவனிடம்
ஒப்படைப்போம் !

நிச்சயமாக ! 
அல்லாஹ் நம்மை நேசிக்கிறான் !!

கவிஞர்:இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்