அஞ்சுவதும் அடிபணிவதும் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday 14 December 2015

அஞ்சுவதும் அடிபணிவதும் !
















நாம் அஞ்சுவதும், அடிபணிவதும்
அந்த அல்லாஹு ஒருவனுக்கே !

நாம் கெஞ்சுவதும், அழுது கேட்பதும்
வல்லோன் அவனிடத்தே !

நாம் தொழுவதும், மண்டி இடுவதும்
அந்த அர்ஷின் அதிபதிக்கே !

நாம் தேவைகளை கேட்டு பெறுவது
அந்த கருணை மிக்கவனிடமே !

நாம் கேட்காமல் அள்ளி தருவதும்
அந்த தூயோன் ரஹுமானே !

நம் வணக்கமும் , நீயத்தும் அவனுக்கே
கூலிகள் தருவதில் ஆற்றல் மிக்கவனே !

நாம் பசித்திருந்து , விழித்திருந்து -ரமழான்
நோன்பு நோற்றோம் அவனுக்காக

பண்மடங்கு கூலிகளை வாரி வழங்குவான்
அடியான் உறுதியாக நமக்கே  !

கொடிய பாவங்களுக்கு துவா கேட்போம்
மன்னிப்பதில் அவன் இறுதியானவன் !

நம் மரணத்தையும் , நம்மையும் அறிந்த
வலிமைமிக்கவன் அவன் ஒருவனே !

நாளை தீர்ப்பு நாளில் நமது கணக்குகளை
நேர் செய்வதும் அந்த கருணையாளனே !

நம்மை உலகில் படைத்து, பரிபாளித்தவன்
அந்த ஆற்றல் மிக்கவனே !

நாம் ஈமானில் உறுதியோடு ,இறுதிவரை
அவனிடமே அஞ்சுவோம் ! அடிபணிவோம் !!

கவிஞர்.கவிநேசன்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்