நடுத்தர நிலை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 19 December 2015

நடுத்தர நிலை !













ஆயிரம் கனவுகளை உள்ளடக்கி 
ஏற்றம் பெற வாழ்கையில்

முயற்சிகளை விதைத்துவிட்டு
முன்னேற்ற அறுவடைக்கு 

தளராமல் மனதுடன் - இன்று
நடுத்தர மக்கள் வாழ்கை நிலை 

விலைவாசி கொடிய விஷம் போல் 
நாளுக்கொரு விலை மாற்றம்

அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் -
விலை ஏறிய அவல நிலை 

பொருளாதாரம் மேம்படும்! அரசியலில்
பொன் முழக்கங்கள் வாக்குகள் பெற 

இந்த பொல்லாத அரசியல் வாதிகளால் -
புண்ணாகிய நம் தேசமும்,மக்களும் 

உண்ண உணவு ஒரு பொழுது குறைந்தாலும் 
உடுக்கும் உடையில் கந்தல் தெரிந்தாலும்

இருக்க இடம் என்பது இன்று இருன்ட கனவு 
சிரத்தையோடு சேமித்து சின்னதாய்

வீட்டு நிகழ்வு சேமிப்பை நம்பித்தான் 
அறிவு பசி தீர்க்க இன்று கல்வி கூடம் 
கனவு தொழிற்சாலையானது 

இன்னும் கனவை நனவாக்க
கோடிகளை கொட்ட வேண்டும் !

வாழ்க்கை சுழல் , பரந்த குடும்பம்
கனவுகளோடு எதிர் காலம் நோக்கி 
விடியலுக்காக ......

இந்த நடுத்தர நிலை  !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்