ஆறாம்பண்ணை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

ஆறாம்பண்ணை !














அழகிய எழில் கொஞ்சும் இந்த
ஆறாம்பண்ணை கிராமம்


மேகங்களை முத்தமிடும் அந்த
வல்லநாடு மலைகளின் காட்சி

செந்நெல் கதிர்களை தென்றல்   
தாலாட்டும் அழகு 

குயில்களின் இனிய கீதம்  
மயில்கள் தோகை நடனம்

அதோ ! மணக்கரை எல்லை
வளைந்து வரும் பாதையில்

குலுங்கி வரும் வாகனங்கள்
ஆட்டு மந்தைகள் அணிவகுப்பு

தவழ்ந்து விரிந்து ஒரு ஜீவநதி
தாமிரபரணி வரும் அழகு

மணிக்கொரு பேருந்து வருகை
வரவேற்கும் மீரான் பாடசாலை

நீண்டு வளர்ந்த தெருக்களின்
நிழலாக வளர்ந்த மரங்கள்

கற்களால் வடிவமைத்து இன்றும்   
கம்பீரமாய் முகைதீன் பள்ளிவாசல் 

தலைமகனை கரம் பிடித்த  
மூத்த மருமகள் பூர்வீகம் இது

பாரம்பரியமிக்க இந்த குடும்பம்
ஏ.ஒன். ஹாஜியார் ஊரே அறியும் 

மார்க்கத்தில் ஈடுபாடு அதிகம்
மரியாதை கலந்த பாசம் உண்டு  

உரிமையோடு கண்ணியமாய்
உறவுகளோடு இணக்கமாய் 

ஒற்றுமையோடு பாசமாய்
என் நினைவில் நிஜங்களாக

இன்னும் மனதில் நிழலாக .......
இந்த ஆறாம்பண்ணை கிராமம் 
   
கவிஞர்:இறைநேசன். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்