தவமாய் தவமிருந்து ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 23 December 2015

தவமாய் தவமிருந்து !












தவமாய் தவமிருந்து
தரணி போற்ற வேண்டுமென
 
தவமிருந்து பெற்றதுதான்
பாசமுள்ள என் பிள்ளை !

சிரத்தையும் பாராமல் இன்னும்
சிறப்பாக உன்னை வளர்க்க
சின்னதாய் பல ஆசை
தீராத இந்த தாய் மனதில் !

பாசத்தில் நான் தாலாட்ட
பரிவோடு பாட்டி சீராட்ட - நீ
பாதம் பட மண்ணில் ஓடி
நடந்து வரும் அழகை கண்டேன் !

இன்னும் தவமாய் தவமிருந்து 
உன்எதிர் கால வாழ்க்கை என் 
நினைவில் கொண்டு
உறுதியான அஸ்திவாரமாய்
உரிமையோடு உனக்காக ....

பாசமுள்ள பெற்றோர்கள் !

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்