காணும் பொங்கல் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

காணும் பொங்கல் !











காணும் பொங்கல் சந்தோசம்
சொந்தங்களை தேடி நாம் 

பொழுது போக்கு உலகிற்கு
புகுந்துவிட்டால் மணி கணக்கு

குடும்பம் ஒன்றாய் கூடி இருக்கும்
கும்மாளமாய் நல்ல களிப்புடன் 

உறவுகளின் வீடுகளில் இன்று
உபசரிப்பிற்கு குறை இல்லை

உரிமையோடு முறை சொல்லி
நிறைவாய் பகிர்ந்து கொள்ளும்

காளையர் கன்னியரை வட்டமிட
காணாத பெரியவர்கள் கும்மாளமிட

களிப்புடன் இன்று உற்சாகமாய் 
கொண்டாடும் காணும் பொங்கல் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்