இலக்கில்லா பயணம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 18 December 2015

இலக்கில்லா பயணம் !















மனிதர்கள் எல்லாம் இந்த
உலகில் பிச்சைகாரர்கள்


வருவதும் போவதும் வாழ்க்கை
பயன் பெருவது உன் பொறுப்பு

உலகில் உன் பயணம் ஓட்டம்
நீ ! சேருமிடம் வந்தால் இறங்கு

ஏறும் இடம் வந்து சேரும் இனி
யோசிக்க நேரமிருக்காது உனக்கு 

தாகம் கொண்டு உதடு தடிக்கும்
தண்ணீரும் அருகில் இருக்கும்

படைத்தவன் நாட்டமிருந்தால்
மட்டுமே  நீ ! அருந்த முடியும்

போலி வாழ்க்கை உனக்கு ஆசை
வேலி இல்லாமல் ஆடும் வேட்டை

அழகும் நிறமும் உன் விருப்பம் அது
நிரந்தரமில்லை அழிந்து போகும்

பணமும் புகழும் சேர்ந்தது உனக்கு
இவைகள் உடன் வருமா நீ ! செத்து

வாழும் நாளில் அமல்களை தேடு
வாழ்க்கைக்கு பிறகு மிஞ்சுவது இது

நீ ! போகும் தூரம் உனக்கு இலக்கு
போய் சேர்வது இறைவன் கணக்கு

உலக வாழ்க்கை ஓடும் தூரம்
தட்டி விழுந்தால் தழுவும் மரணம்

பிறப்பு இறப்பு இறைவன் படைப்பு
பூமி கூட சொந்த்தமில்லை உனக்கு


கவிஞர்.இறைநேசன். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்