விரும்பினேன் உனை நான் வேண்டி நின்று -
விழியோடு இமையாக மூடி சென்று !
விழியோடு இமையாக மூடி சென்று !
எனக்கே புரியாத எண்ணம் கொண்டு -
ஈடுபாடு அதிகமானது உன்னை கண்டு !
சிறகடித்து பறந்தோம் ஜில்லென்று - இன்னும்
ஈடில்லா சந்தோஷத்தில் எல்லையும் என்று !
உன்னை காணாத நாள் எல்லாம் துக்கமாக
கண்டுவிட்டால் உன் அருகில் சொர்க்கமாக !
நினைத்து விட்டால் மறு நிமிடம் உன் முன்பாக
கொடுத்திடுவேன் பொருட்களை பரிசாக !
கண் அசைவை புரிந்து கொண்டு செயலாக
என் கனவுகளும் அது என்று தோற்றமாக !
உலகமே நீ என்று உன் பின்னாலே - இன்னும்
உரிமையோடு பழகிய நாட்கள் முன்னாலே !
சின்னதாய் சில சண்டைகள் வந்தாலும்
செல்லமாய் உதிர்ந்திடும் உன் அன்பாலும் !
உன் தொலைபேசி அழைப்புதான் சுறுசுறுப்பு
வராவிட்டால் நான் தவிக்கும் பரிதவிப்பு !
ஒரு வேலை சாப்பிட நான் மறந்தாலும் - நீ
கேட்டுவிட்ட பரிசு பொருளை மறந்த்ததில்லை !
வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள நேரம் வரும்
உன் பிறந்த நாள் மட்டும் தான் நினைவு தரும் !
கல்லூரி நாட்களில்தான் காதல் ஊரும் - நல்ல
கச்சிதமாய் பல கனவுகளுடன் வற்றி விடும் !
காரணம் இல்லாமல் கழற்றி விட்டாய் எனை
ஒரு பொய்யை நீ கூறி !
மாறி விட்டாய் மனதில் கொண்ட
நம் உறவை தூக்கி வீசி !
உன்னை விரும்பிய முட்டாள் தனத்திற்க்காக
மீண்டும் ஒரு முறை மன்னித்து விடு என்னை !
அடடா இது தான் காதலா .............. !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்