தொட்டு கொள்ள உறவா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 30 December 2015

தொட்டு கொள்ள உறவா !













உறவுகள் என்ன ஊறுகாயா ? நீ !
நினைத்தால்தொட்டு கொள்ள


உரிமை மட்டும் கையில் எடுத்து  
ஒரு குறையாய் நீ சொல்லி அழ

தாயின் மணிக்கொடி பிடித்து
வந்த இந்த பந்தம் எல்லாம்

மாறும் சூழ்நிலையில் –இதுவும்  
மாறி விடும் சில நொடியில்

பெற்றவர்கள் வாழ்ந்த காலம்
நம்ப வைத்து நடித்த கோலம்

மற்றவர்கள் பார்க்க வேண்டி
இனியுமா நடிக்க வேண்டும்

கொட்டி வைத்த வேதனையை
விட்டு மனம் மறக்குமா !

செத்து போன உறவை இனி
சிரிக்க வைக்க முடியுமா ?

பிரிவை தாங்கி வருந்தி மனம்
வேஷமாகி போனது தினம்

உடன் பிறப்பும் பாரமாகும் –இனி  
உன்னை ஏன் பொருட்படுத்த

உறுத்து இல்லை பொறுத்து கொள்ள   
வருத்தம் இல்லை ஒதுங்கி செல்ல
 
உணர்ந்து நீ ! ஒரு நாள் வரும் போது
உறவுகள் (மனமோ) இறந்து இருக்கும் 

உறவுகள் இல்லை தொட்டு கொள்ள
பந்தங்கள் வேண்டாம் சொல்லி அழ !


கவிஞர்.இறைநேசன்..

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்