ஏழ்மையான குடும்ப தோற்றம்
கல்வி கற்பதே அன்று நோக்கம்
கற்றதை பிறருக்கு கற்பிப்பதே
இறுதி மூச்சாய் ஷில்லாங்கில்
மெஞ்ஞானம் கற்று வந்த எங்கள்
நாட்டின் விஞ்ஞானம் நீங்கள்
இராமேஸ்வரம் தந்த நிகரில்லா
பாம்பன் பாலம் நீங்கள்
பத்மபூஷன் , பாரதரத்னா உங்கள்
சாதனைக்கு கிடைத்த மணி மகுடம்
உங்களின் வாழ்க்கை பெரும் பகுதி
இளைய தலை முறை மாணவர்கள்
வல்லரசு நாடாக இந்தியா உங்கள்
வாய் மொழி உறுதிமொழியாக
கனவு காணுங்கள் விழிப்புடன்-இனி
வெற்றி உங்களுக்கு நிச்சயம் என்ற
தாரக மந்திரமாய் எங்கள் நெஞ்சில்
விதைத்த வித்துக்கள்
நமது கனவே லட்சியம் என்றால்
வெற்றி நமக்குதான் இது நிச்சயம்
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்