இது வசந்தமான நாள் உனக்கு
இனிவயதை கூட்டும் கணக்கு
இனிவயதை கூட்டும் கணக்கு
உலக அறிமுகத்தை உனக்கு
உணர்த்திய நாள் இன்று
உனக்கு வாழ்த்துரைக்க - இங்கே
வயது ஒரு பொருட்டல்ல
மனமிருந்தால் போதும் - நல்ல
மனங்கள் வாழ்த்து பலம்
பணம் கொண்டவருக்கு இது விழா
இரவை பகலாக்கும் கேளிக்கை
கடந்த வருட அசைவுகளை சேமித்திடு
புதிய வருடம் முன்னேற்றத்திற்கு முயற்சி
எதிர் வரும் வருடங்களும் இன்னும்
இனிதாய் நலமாய் , வளமாய் அமைய
வாழ்த்துக்களுடன் .........
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்