மனதில் உதயமாகும் ஊற்று - இன்னும்
புன்முறுவலுடன் இன்றைய தோற்றம் !
அவசர உலகத்தில்கிடைப்பது அரிது
ஏங்குவோர் பலர் இந்த பாசத்திற்காக !
தாய் வளர்த்து தந்தை பெயர் சூட்டி
தாரம் தந்த வாரிசு என்று பாசம் !
பல குடும்பம் பிள்ளைகளில் பாகுபாடு
சமம் இல்லாத ஒரு சரிவான தோற்றம் !
கருத்து வேறுபாடு முற்றி இதனால்
களைந்து போன கூட்டு குடும்பங்கள்!
உறவுகள் சிதறிவிட்ட நிலை - இன்று
பாசத்திற்காக ஏங்கும் ஒரு நிலை !
"பாசம் " பாகுபடுத்தாத வரை நிலைக்கும்
வேற்றுமை கண்டால் பிளவு படும் !
புன்முறுவலுடன் இன்றைய தோற்றம் !
அவசர உலகத்தில்கிடைப்பது அரிது
ஏங்குவோர் பலர் இந்த பாசத்திற்காக !
தாய் வளர்த்து தந்தை பெயர் சூட்டி
தாரம் தந்த வாரிசு என்று பாசம் !
பல குடும்பம் பிள்ளைகளில் பாகுபாடு
சமம் இல்லாத ஒரு சரிவான தோற்றம் !
கருத்து வேறுபாடு முற்றி இதனால்
களைந்து போன கூட்டு குடும்பங்கள்!
உறவுகள் சிதறிவிட்ட நிலை - இன்று
பாசத்திற்காக ஏங்கும் ஒரு நிலை !
"பாசம் " பாகுபடுத்தாத வரை நிலைக்கும்
வேற்றுமை கண்டால் பிளவு படும் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்