ஐந்தறிவு பூனைகள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

ஐந்தறிவு பூனைகள் !













ஆறரிவு மனிதனை விட –இந்த
ஐந்தறிவு பூனைகள் புத்திசாலி


மியாவ் மியாவ் என்ற அழைத்து 
குழந்தை பரிவை கட்டும்

பதுங்கி பாய்வதில் புலிகளின்
குணத்தை ஒத்து இருக்கும்

அன்னமிட்டவரிடம் அணுகும்
பாசமே இதன் தனி வழி

ஓடி விளையாடும் பாப்பா போல்
ஒளிந்து விளையாடும் அழகு

வீட்டை சுற்றி வரும் பூனை
பழகினால் கால்களை சுற்றும்

சுறு சுறுப்பை நாம் இவைகளிடம்
கற்று கொள்வோம் இனி

வீட்டிற்கு ஒரு செல்ல பிராணி-நம்
பிள்ளை போல் கள்ளமில்லாமல்

யானையின் பலத்தை விட இந்த
பூனைகள் குணம் சிறந்தது

கவலை மறந்து களிப்புடன் இருக்க 
பூனை ஓன்று வளர்ப்போம் இனி


கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்