என் ஆழ்ந்த நினைவில்
அவன் முகத்தை கண்டேன் !
அவன் முகத்தை கண்டேன் !
என் அகன்ற மனதில்
அவன் அன்பை கொண்டேன் !
என் சிரித்த முகத்தில்
அவன் நேசிப்பை பெற்றேன் !
என் மிளிர்ந்த கண்ணில்
அவன் மொழியை கற்றேன் !
என் படித்த வார்த்தையில்
அவனை புத்தகமாக்கி விட்டேன் !
இந்த பரந்த உலகில் அவனை
சிறைபிடித்து நின்றேன் !
என் முற்று பெறாத இந்த
நினைவு மேகம் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்