விண்ணின் மழை
துளி – இங்கு
பருவ மழையும்
தவறவில்லை
தவறியது கொட்டி
தீர்த்த நிலை
ஏன் ? நம்மை
படைத்தவனின்
கோபப்பார்வையாக
இருக்கலாம்
சிறு துளியாய்
விடாமல் தொடங்கி
பெரும் வெள்ளமாய்
சீரழிவு
உயிர் பொருட்
சேதம் மக்கள் இனி
உடைமைகளையும்
இழந்து தனி
தத்தளிக்கும்
தமிழகம் தண்ணீரில்
தூங்காத வேதனை
இது வரை
ஒருவரையொருவர்
குறை கூறி
இதற்க்கு மாற்று
வழிதான் என்ன
இழுத்து சென்ற
மனித உயிர்கள்
வெள்ளமாய் நீர்
சூழ்ந்த வீடுகள்
அவலமாய்
அனாதையாய் –இன்னும்
ஆறுதல் இன்றி
அலங்கோலமாய்
அழுது ஓலமிட்டு
உதவி கரம் நீட்டி
தாமத மீட்ப்புபணி
மிஞ்சியது இழப்பு
மழை சேதம் !
மறையாத வடுக்கள்
வடியாதா வெள்ள
நீர் இன்னும்
விடியாத சோகங்கள்
தொடரும் ......
கவிஞர்:இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்