பூமான் நபிகள் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 16 December 2015

பூமான் நபிகள் !
















பூமான் நபிகளை எங்களுக்கு
பூமியில் தந்தான் இறைவன்

உறுதியாக இறுதி நபி என்று
மறை வழியே சொன்னான்

புனித லைலத்துல் கதிர் இரவில்
ஜிபிரியல் (அலை) மூலம்

ஹீராக் குகையில் இறக்கி தந்தான்
திருமறையை பெருமானிடத்தில்

அன்னாரின் போதனைகள் என்றும்
வாழ்விற்கு நல்ல வழி காட்டல்கள்

மார்க்கம் வளர அவர்கள் சந்தித்தது
வேதனையும் , சோதனையும்

அவர்கள் வாழ்ந்து காட்டியது
வாழ்கையின் நல்ல பேணுதலகள்

ஏகத்ததுவம் , எளிமை தோற்றம்
வாழ்ந்து சென்றது இன்னும் சிறப்பு

மனிதரில் ஒரு மாணிக்கம்
மார்க்கத்தின் மணி மகுடம்

இறை தூதர் முஹம்மது நபிகள்
இகமே போற்றும் பூமான் நபிகள் !


கவிஞர்:இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்