மறைந்தது ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 20 January 2016

மறைந்தது !












மறைந்தது சரித்திரம் !

சரித்திரம் ஓன்று மறைந்தது
படைத்தவனின் நாட்டப்படி

மணம் முடித்த நல்ல துணைவி
ஆலமரமாய் பரந்த வாரிசுகளோடு

அயர்ந்து ஒரு தூக்கம் அதுவே
இறுதியாக வல்ல இறைவனிடம்

மர்ஹூம்.M K M A K யின்மருமகன்
மர்ஹூம் M M நயீம் ஹாஜியார்

முத்தான மக்களை பெற்றெடுத்து
தலை முறை கண்ட சகாப்தம்

அமானியநகரமே அறிந்த்தவர்
பெருமை இல்லாத பொறுமை 

வாழ்க்கை பாதி கடின உழைப்பு
வாழ்ந்து சென்றது இன்னும் சிறப்பு

பாசம் காட்டியது பிள்ளைகளிடத்தில்
நேசம் கொண்டது உறவுகளிடத்தில்

நல்ல குடும்ப தலைவனாய் –இன்னும்
வாரிசுகளுடன் மிக இணக்கமாய்

இவர் இல்லம் ஒரு வேடந்தாங்கள்
உரிமையோடு வந்து இளைப்பாற

இவர் வளர்த்த நந்தவனம் –உதிரும்  
இலையும் இவர் பெயரை உச்சரிக்கும்

உறக்கத்தில் உயிர் பிரிந்தாலும் –அது
ஒரு அழகான மௌத்து பாக்கியம்

சபூர் செய்து கொள்வோம் இழப்பை
துவா செய்வோம் அவர் மறுமைக்கு

இறைவா! 
இவர் பாவங்களை மன்னித்து  
சுவனப்பதவியை தந்தருள்வாயக !

அமீன் ! யாரப்பில் ஆலமீன்  !!


கவிஞர் :இறைநேசன்   

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்