உயிருள்ள போதே
எழுதி விடு
உன் விருப்பப்படி
நிர்பந்தமின்றி
இறைவனை அஞ்சி
தெளிவாக
உயிரோடு நீ !வாழ்ந்த
காலம்
உறவும் நடித்தே வாழ்ந்தது
உனக்கு புரியாத மாயையில் நீ !
ஒற்றுமை என்று நினைத்தாய்
உனை புதைத்த மண் காயும் முன்
வாரிசுகள் சண்டை
ஆரம்பமாகும்
விட்டு கொடுப்பதை
விட இங்கே
விடாபிடிதான்
அதிகமாகும் தினம்
துரோகத்திற்கு
தயாராகும் பாசம்
சூழ்ச்சிகள்
போடும் இனி வேஷம்
ஒருவரையொருவர்
சாய்க்க உன்
வாரிசின் மன நிலை
செல்லும்
இறுதியில் நீதிமன்றம்
படி ஏறும்
பொய்கள் வாய்தா
வாங்கும்
இரண்டு தலைமுறை
கடந்தாலும்
சொத்து வழக்கின் தீர்ப்பும் வராது
கேள்வியாக ? இனி உறவின் நிலை
பகையோடு உயிலின் இறுதி நிலை
சொத்து உயில் !
சொத்து உயில் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்