விமர்சனம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 3 January 2016

விமர்சனம் !













விமர்சனம் !

அன்பு உள்ளங்களுக்கு .....


சமீப காலமாக முகநூல் பகுதியில் படைப்புகள்,தொகுப்புகள்
கட்டுரைகள்,கவிதைகள்,
காணொளிகள்,நிழற்படங்கள்,

இன்னும்

நிஜப்படங்கள்,அரசியல் மற்றும் தலைவர்கள் உரைகள் மற்றும்
கருத்துக்கள் இன்னும் தனி நபர் பதிவுகள் என்று பலவாறு நாம்
காண முடிகிறது. இதனை மற்றவர்களும் காணப்பெற்று 

அதற்க்கு

விமர்சனம் செய்வது என்பது மரபு. இதில் குறைகளை சுட்டி காட்டி
நிறைகளை பகிர்ந்து கொள்வது இன்னும் பிழைகளை கவனத்திற்கு
கொண்டு வருவது அவசரம் 
அவசியம் என்ற நிலைப்பாடும் 
மறுக்க முடியாது ஒன்றுதான்.

இன்னும் அவரவர் மதங்கள் வழிபாடு,கொள்கை,உரிமை !

இதில்
தலையிடுவதும் விமர்சிப்பதும் அநாகரிக செயலாகும்.நமது
எண்ணங்களை,மறுப்புகளை பதிவு செய்ய வார்த்தைகளில்
வரைமுறை ஓன்று தேவை, தரம் தாழ்ந்த வார்த்தைகளை கொண்டு
விமர்சிப்பது விமர்சிப்பவரின் மனித நேயமற்ற தன்மையையும்
தரத்தையும் தாழ்த்தி காட்டுகிறது. இன்னும் அவரின் சிறுமையை
வெளிப்படையாக காட்டுகிறது 
என்பது பொதுவான கருத்து. 

எனவே

விமர்சனம் செய்வதில் கண்ணியம் கோட்பாடுகளை கடை பிடித்து
தரமான வார்த்தைகளை கொண்டு நிறைவாக உங்கள் விமர்சனம்
இருக்க வேண்டும் என்று என் தாழ்மையான கருத்தையும் 
இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றி !

கவிஞர்:இறைநேசன்.
 
 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்