இதயக்கனி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

இதயக்கனி !














பாசத்தில், நீ ! சளைத்தவனில்லை
கோபத்தில் குறைந்தவனுமில்லை
 

உடன் பிறப்பு உயர்த்திய உன் நிலை
இன்று வரை உதவும் உன் நிலை

எனக்கு தெரியாது என்பாய் ஆனால்
தெரிந்து கொள்ள முயற்சிப்பாய் 

நான் இல்லை என்பாய் – ஆனால்
நிகழ்வில் முதலில் வந்து நிற்ப்பாய்

ஏதற்க்கு உதவ வேண்டும் என்பாய்
எதிர்பார்பின்றி கொடுத்து விடுவாய்

நீ ! தட்டி பேசாதது தகப்பன் வார்தை 
நீ ! கொட்டி வைத்த பாசம் தாயார் மீது

உறவுக்குள் மண பந்தம் இன்னும்
உரிமைக்கு ஒரு மகள் சொந்தம்

திறமையில் கற்றகல்வி சிறப்பு
பல்மருத்துவர் பெற்றோர் நெஞ்சில்

குறை மட்டுமே கூறும் உலகம்
நிறையை சொல்வதில் தயங்கும் 

ஏதுவனாலும் வேண்டும் முதலில்
இரண்டாவது என்பது பிடிக்காது

முதல் வாரம் இணைந்திடுவாய் 
மறு வாரம் ஒதுங்கி நிற்பாய்

இது வரை புரியாத புதிர் இதற்கு 
விடை தேடும் நாங்கள் இன்றும் 

கல்விக்கு உதவினாய்  இன்னும்
குமர்களை கரை சேர்த்தாய்

பெற்றோர்கள் வாழ ஒரு வீடு
சொந்த வீட்டில் பார்க்க ஆசை

உன் பங்களிப்பை கொடுத்து
அதையும் செய்தும் முடித்தாய்

சொந்த வீட்டில் இருந்து கொண்டு 
சந்தோசத்தை தொலைத்தாய் 

உன்னால் பயன் பெற்றவர் மிகுதி
பின் அவரே உனக்கு நல்ல எதிரி

கொடுக்கும் உன் குணத்தால் 
இறைவன் உயர்த்திய உன்நிலை

கொடுத்திட்டு சொல்லி காட்டுவது 
வருத்தம் கொள்ளும் பலர் மனம்

கோபத்திற்கு அடிமை அவசரபுத்தி
இது மாறினால் நீ ஒரு சரித்திரம்

மீரான் , நீ ! ஒரு ஏணிப்படியாக 
உன்னால் முன்னேறியது பலர்

கொடுப்பதில் வள்ளலாக .....
மனதில் இதயக்கனி யாக !

கவிஞர்:இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்