என் இனம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

என் இனம் !











இலங்கையில் மறத்தமிழன் தன்
இனத்திற்காக செத்து மடிந்தான்

சொல்லி மாளாது அந்த வேதனை
மறக்க முடியா ஒரு போர் முனை

இனியும் தப்ப முடியாது அதிபர்
போர்வையில் இலங்கை அரக்கன்

உலகையே உருக்கிய போர் - இன்று
ஐ நா சபையில் ( போர்) குற்றமாக

போர் குற்றம் நிரூபணம் செய்ய
போதிய ஆதாரம் இது தாராளம் 

எத்தனை உயிர்கள் மாய்ந்தது
எத்தனை சிசுக்கள் எரிந்தது 

வாழ நினைத்து தமிழ் இனம்
வீழ்ந்தது இலங்கை மண்ணில்

பெண்களை மானபங்கம் செய்த 
ராணுவத்தின் தீராத வேட்கை 

கனத்தது மனது மடிந்த தமிழன்
கொண்ட கனவுகளை எண்ணி

மீனவன் இலங்கை கடற்படையால்  
சீற்றம் கொண்ட கடலில் பிணமாய்

நெருங்கி விட்டது இனி விடிவு
எதிரிகளுக்கு வரும் பேரழிவு 

சினம் கொண்ட தமிழ் இனம்
உலகம் இலங்கை மன்னிக்காது

மடிந்தது தமிழனின் கனவு அல்ல
விரைவில் விடிந்திடும் நனவாக

கனத்த மனதோடு தமிழனுக்கு
கண்ணீர் துளிதான் காணிக்கை ! 

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்