உலக வாழ்வு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Sunday, 28 February 2016

உலக வாழ்வு !




பூக்களுடன் புது மணம் 
பூவுலகில் உன் வாழ்க்கை

தூக்கும் முன் சந்தூக்கில்
ஈ மொய்க்கும் உன் உடலை

பட்டு வேட்டி பளிங்கு வீடு 
பளபளக்கும் உடல் மணக்கும்

சட்டென்று உயிர் பிரிந்தால் நீயும் ஜனாஷா மண்ணில்

கொட்டி கிடந்த செல்வமும்
கட்டி வந்த மனைவியும் 

பொத்தி வளர்த்த பிள்ளை
உடன் வர முடியாத பயணம்

உலகில் செய்த வணக்கம்
பசித்திருந்து வைத்த நோன்பு 

கொடுத்து வந்த ஜக்காத்து
செய்து வந்த நற்காரியங்கள்

இதை கொண்டே மறுமை இனி
புரிந்து கொள் தெளிவு உனக்கு 

சொல்லி வராத பயணம் இது
தூரமில்லை வரும் தருணம்

உலக வாழ்க்கை போலி
வரும் முன் விழித்துக்கொள் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்