அண்ணக்கிளி தந்த
அறிமுகம்
கிராமியம்,நீ ! கற்று தந்த பாடம்
இது மண்வாசனை தாங்கி வந்த
மகிழ்ச்சியின்
பரிமாணங்கள்
அந்தி மழை
துளிகளின் சாரல்
ஆர்மோனியத்தில் பிறந்த நாதம்
எளிமையும் ஆன்மிகமும் உன்னுள்
வாழ்ந்து வரும்
நிஜங்கள்
பாவலர் சகோதரர்தான் உங்களுக்கு
அன்று அன்பும் எல்லாமுமாய்
கருப்பு வெள்ளை
காலம் அது
தமிழ் சினிமா அசைவில் ராகம்
இசைக்காகவே
பிறந்த ராஜா, நீ !
இளையவனாய் பாடிய கீதம்
மேஸ்ட்ரோ உனக்கு
சூட்டிய
மணிமகுடங்களில்
ஓன்று
இனிய கீதங்கள்
உன் உதயம்
இசைத்த பாடல்கள் வைரம்
வாழ்ந்து வரும் சினிமா
–உன்
இசையால்
வளரட்டும் கம்பீரமாய் !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்