எங்க வாப்பா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Wednesday, 30 March 2016

எங்க வாப்பா !











எங்க வாப்பா வருசை முஹம்மது
குடும்பம் ஊரிலே பெயர் பெற்றது


எங்கள் தாயார் பீவி அசன்பாத்து
பாசமாக எம்மை வளர்த்தெடுத்து
  
வாப்பா குடும்பம் ஏழ்மையானது 
வளர்ந்ததோ நாங்கள் எளிமை  

பெண் மக்கள் நான்கு பேர் இனி   
ஆண் மக்கள் ஐந்து பேர்  

கஷ்டங்களை மட்டுமே சுமந்து
வாழ்ந்தோம் ஆரம்ப நிலையில்

தாயார் எம்மை ஒழுக்கமாய் வளர்த்ததில் தவறியதில்ல இனி    

சொல்லிக்கொள்ள வேலையில்லை 
கையில் மிச்சம் காசும் இல்லை

தாயார் கோரம்பாய் முடைந்துதந்து
விற்று வந்தால் அடுப்பெரியும்

கஷ்டப்பட்டு கொண்டு வரும் காசில்
கால் வயிற்று கஞ்சி தான் மிச்சம்

குடும்ப நிலை உயர்த்தி வைக்க
இறைவன் நினைத்தான் ஒரு நொடி

வந்தது அரபு நாடு செல்ல வாய்ப்பு 
சகோதரர் ஒருவர் பயணம் கொள்ள

கஷ்டங்கள் கடந்தது இறைவன் நாடி
சந்தோசம் வந்தது வாழ்கையில் கூடி

இறைவன் அழைப்பு தவறாதுவந்து  
பெற்றோர்கள் மரணம் கடந்தது

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை நாம் 
வாழமுடியுமா ? 
சிந்தித்தால் தெளிவு !

இன்னார் குடும்பம் ஊர் மெச்சனும்
வருசைமுஹம்மத வாழ்த்தனும் !
  
கவிஞர்.இறைநேசன்.  


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்