மரணம்! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 5 March 2016

மரணம்!















மரணம் எதிர்நோக்கி அந்த
மரக்கட்டிலில் மெலிந்த உடல்

சுவாசம் ஒன்றே செயல் பாடு
மணிக்கொருமுறை 
மருத்துவருக்கு மட்டும்
அறிந்த நாடித்துடிப்பு
படைத்தவனுக்கு மட்டுமே
தெரியும் நொடித்துடிப்பு
வாரிசுகள் சூழ்ந்து நின்று
வாயிலே பாலூற்ற
தொண்டைக்குள் இறங்குவது
இறைவனின் நாட்டபடி 
மண்ணுலக வாழ்க்கை இதோ
முடியும் தருவாய்
இனி கண் கலங்கி என்ன பயன்
தவணைதான் நீடிக்குமா ?
உறவுகளுக்கு தகவலும் போச்சு
பெரு மூச்சியும் ஆரம்பமாச்சு
நொடிப்பொழுது எண்ணப்படும்
நேரமும் நெருங்கியாச்சு
ஒவ்வொரு மனிதனும் இந்த
நிலையில் கண்ணீர் சிந்துவான்
மனம் வருந்தி பாவ மன்னிப்பு
கேட்க்க இதுவல்ல நேரம்
நீ ! வாழ்ந்த காலங்களில்
செய்த வணக்கங்கள்
நிலையாக செய்து வந்த
தர்மமும், கொடைகளும்
முழுமையாக செய்த நல்ல
காரியங்களும் மட்டுமே
உன் உடன் வரும் இறுதியாக
பரிந்துரைக்கும் மறுமை நாளில்
நாம் மரணிக்கும் முன் நம்முடைய
பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போம்
அடியான் கேட்கும் துவாவை
அல்லாஹு ஏற்று கொள்வான்
இன்னும் அடியான் கையை வெற்று
கையாக அனுப்ப வெட்கப்படுகிறான்
அடியான் தன்னிடம் கேட்கும் உதவிக்கு
அல்லாஹு சந்தோஷ படுகிறான்
ஒவ்வொரு மரணத்தையும் பார்க்கும்
உனக்கு உன் மரணம் பயமில்லையா ?
மரணத்தை இன்னும் சுவையுங்கள்
எங்கிருந்த போதும் மரணம் வரும் !
இறைவன் மட்டுமே அறிந்தது –இனி
உறுதியாக எல்லோருக்கும் .........

கவிஞர்.இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்