வேண்டுமா இனி ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 5 March 2016

வேண்டுமா இனி !













கடந்தது வருடம் கருத்தது தேகம்
பணத்தேவை,சிந்தியது வேர்வை

ஏனிபடி ஒரு தாய் மாமன் முயன்று
ஏறி சென்றேன் கடல் கடந்து

கற்றதொழில் கை கொடுத்தது
மற்றொரு மாமன் நிறுவனத்தில்

அயராது உழைத்து அனுபவம் கூடி
திறமையாக கடையை நடத்தினேன்

வருத்தங்கள் பல முறை வந்தது
பொறுத்து காத்தேன் என் சூழ்நிலை

குறைகளை இனி மனதில்புதைத்து
குடும்பம் வேண்டி பொறுமையாக 

உல்லடி ,சொல்லடி, மனம் வெந்தது 
ஊரெல்லாம் பேச்சு"வேலைக்காரன்" 

மனதோ உடைந்து போனது பலநாள்
உறவால் என் நிலை தத்தளித்திடும் 

முடிவெடுத்தேன் இறைவனை நாடி
முறையாக முன்னறிவிப்பும் கூறி

வெந்த மனதில் கணக்கு இருக்கு
வேண்டாம் என விட்டு மறந்து

நாலுபேர் இல்லை நியாயம் கேட்க  
குறை சொல்ல மட்டும் ஒரு கூட்டம் 

ஒதுக்குபவர்பற்றி வருத்தமில்லை 
ஒதிங்கிடுங்கள் இனி உறவில்லை 

கொடுத்தேன் கடை கணக்கு  
முடித்தேன் எனது விசாவை !

கனத்த மனதுடன் 
துபாய் கரை கடந்தேன் !

இனியும் வேண்டுமா ? 
இப்படியும் ஒரு உறவு !

கவிஞர்:இறைநேசன்.













No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்