மீடியா ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 22 July 2016

மீடியா !













செயல் இழந்த மீடியாக்கள்  !

இன்று ஒரு சில மீடியாக்களை தவிர பாக்கி மீடியாக்கள் அனைத்தும்
செயல் இழந்த நிலையில் செயல்படு வருகிறது என்பதை நாம் இன்றும்
கண்கூடாக காண முடிகிறது.


பொதுவாக மீடியாக்கள் உண்மையை உள்ளபடி மதசார்பில்லாமல் மனித
நேயத்துடன் சற்று கூட்டியோ ,குறைத்தோ, மிகைபடுத்தியோ இன்னும்
ஆதாரமற்ற கற்பனை கொண்டோ இல்லாமல் களத்தில் நடந்த உண்மை
சம்பவத்தை எழுதுவது அல்லது ஒளிபரப்புவது என்பது மட்டுமே தார்மிக
கடமையாய் இருக்க வேண்டும்.இன்னும் இது தொழில் தர்மமும் கூட ....
ஆனால் இது போன்றுதான் நடக்கிறதா என்றால் .... இல்லை என்று தான்
கூற முடியும்.
பதிப்பின் பக்கங்களை நிரப்ப வேண்டும் ,சூடான செய்திகளை தர
வேண்டும் என்று போட்டா போட்டிகளில் இன்று மீடியாக்களின் நிலை
அன்றைய தின தலைப்பு செய்திகளை ஒவ்வொரு மீடியாக்களும்
ஒவ்வொரு கோணங்களில் கற்பனைகளை கூட்டி வெளியிடும் போதோ
அல்லது ஒலிபரப்பும் போதோ உண்மையான செய்தியை தரும் சில
மீடியாக்களின் செய்தி பொய் ஆகி விடுகிறது இது உண்மையும் கூட ...
மதங்களால் சாயம் பூசப்பட்ட மீடியாக்கள் தான் இன்று கூடுதலாக
இருக்கிறது இனி மக்களால் பேசப்படும் உண்மையும் இதுதான்.
தவறான தகவல்களை ஆராய்வதை தவிர்த்து விளம்பரங்கள நம்பியும்
அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் அசல்களை போலியாக்கி
போலியை அசலாக்கி வியாபாரத்தில் லகரங்களை ஈட்டுவதையே
குறிக்கோல் என்றாக்கி செய்யும் தொழிலின் தரத்தையும் இன்னும்
தொழில் தர்மத்தையும் இழந்து இன்று மக்களுக்கு சீரிய செயலாற்றி
கொண்டிருக்கிறோம் என்பது மக்களை பொறுத்தவரை வெறும் பிதற்றல்
என்பதுதான் மக்களின் உண்மையான குமுறல்.
உள்ளதை உள்ளபடி மாற்றமில்லாது இன்னும் மாற்று கருதில்லாது
களத்தில் நடந்தவற்றை கத்தரிக்காது எந்த நிர்பந்தங்களுக்கு அடி
பணியாது இன்னும் உண்மையை உரக்க சொல்லி தன் கடமையை
மீடியாக்கள் தார்மீக முறையில் ஆற்ற வேண்டும் என்பதே ஒட்டு மொத்த
மக்களின் அன்பான வேண்டுகோள்.
வணக்கத்துடன் ..........

கவிஞர்: இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்