பாவ மன்னிப்பு ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 23 July 2016

பாவ மன்னிப்பு !













யா அல்லாஹ் !

நாங்கள் அறிந்தும் , அறியாதும் 
தெரிந்தும் ,தெரியாதும் செய்த 
பெரிய ,சிறிய பாவங்களையும் 
மறைவாகவும் ,பகிரங்கமாகவும்
செய்த பாவங்களையும்
மன்னித்தருள்வாயாக !
ஆமீன் !

எங்கள் பெற்றோர்களுக்கு
ஹிதாயத்தை தருவாயாக ! ஆமீன் !

எங்கள் முன் சென்றோரின்
பாவங்களை மன்னித்து அவர்களுக்கு
சுவன பதவியை
தந்தருள்வாயாக ! ஆமீன் !

உன் மீதே உண்மையான ஈமான்
கொள்ள அருள் புரிவாயாக !
ஆமீன் !

உன்னுடைய நேரான வழியிலும்
நிறைவான பாதையிலும்
எங்களை எல்லாம் வழி நடத்தி செல்வாயாக !
ஆமீன் !

எங்களுடைய தொழுகை
மற்றும் நோன்புகளை ஏற்று
கொள்வாயாக ! ஆமீன் !

எங்களுடைய தொழுகை , நோன்பில் 
ஏற்பட்டுள்ள குறைகளை
மன்னித்து ஏற்று கொள்வாயாக !
ஆமீன் !

எம் பெருமானார் வாழந்து சென்ற
வாழ்க்கை பாதையை எமக்களித்து
அருள்புரிவாயாக ! ஆமீன் !

உலகில் வாழும் எல்லா மூமீன்கள்
முஸ்லிம்களுக்கும் உன்னுடைய
நேரான பாதையில் வாழ்ந்து
கலிமாவுடன் மரணிக்கும்
பாக்கியத்தையும் தந்தருள்வாயாக !
ஆமீன் !

உலகில் எங்கெல்லாம் பஞ்சம், பசி
யால் முஸ்லீம்கள் வாழ்கிறார்களோ
அவர்களுக்கு உன்னுடைய ரிஸ்கை
அளப்பாயாக ! ஆமீன் !

உலகிலுள்ள முஸ்லீமான ஏழை 
குமர்களுக்கு திருமணம் ஆக
கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக !
ஆமீன் !

எங்கள் முன் சென்றோர் பாவங்களை 
மன்னித்து அவர்களுக்கு சுவன பதவியை
தந்தருள்வாயாக ! ஆமீன் !

ஷாலிஹான கணவரையும்
ஷாலிஹான பிள்ளைகளையும்
எங்களுக்கு தந்தருள்வாயாக !
ஆமீன் !

ஷாலிஹான மனைவியை
எங்களுக்கு தந்தருள்வாயாக !
ஆமீன் !

குழந்தை பாக்கியத்தை எங்களுக்கு
தந்தருள்வாயாக ! ஆமீன் !

எங்களுடைய நோய் நொடிகளை
குணமாக்கி உடல் ஆரோக்கியத்தை
தந்தருள்வாயாக ! ஆமீன் !

ஹஜ் , உம்ரா செய்யக் கூடிய பண
பலத்தையும் , உடல் வலிமையும்
தந்தருள்வாயாக ! ஆமீன் !

ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும்
உயர்ந்த சுவன பதவியை எமக்கு
தந்தருள்வாயாக ! ஆமீன் !

எஙகள் வியாபாரங்களை பரக்கத்
ஆக்கி தருவாயாக ! ஆமீன் !

வெளி நாடுகளில் வேலை செய்து 
வரும் எங்கள் மக்களுக்கு அவர்கள்
வேலைகளை நிரந்தரமாக்கி இன்னும் 
பதவி உயர்வையும் வருமானத்தையும்
கூட்டி தர அருள்புரிவாயாக ! ஆமீன் !

இறைவா !

நீ மன்னிப்பவன் !

மன்னிப்பை விரும்ப கூடியவன் !

எங்களை மன்னிப்பாயாக  !

கவிஞர்: இறைநேசன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்