பஞ்சம் பசி !
பட்டவனுக்குதான் தெரியும்
பசியின் வலி என்னவென்று !
பசியின் வலி என்னவென்று !
பஞசம் வந்து மிஞ்சும் பசி
நாளும் ஆட்டி படைக்கிறது !
நாளும் ஆட்டி படைக்கிறது !
பட்டினிதான் எத்தனை நாள்
என்று மட்டும் தெரியவில்லை !
என்று மட்டும் தெரியவில்லை !
ஒட்டிய வயிறு் ஈரத்துணியை
சுற்றியும் பசி குறையவில்லை !
சுற்றியும் பசி குறையவில்லை !
நீரை மட்டுமே அருந்தி வந்தால்
அடங்குமா பசி அறியவில்லை !
அடங்குமா பசி அறியவில்லை !
பிஞ்சு மழலை பசித்து அழுகிறது
மனதோ வெதும்பி தவிக்கிறது !
மனதோ வெதும்பி தவிக்கிறது !
வற்றிய மார்பில் பாலுமில்லை
கட்டி அணைத்து கொடுப்பதற்க்கு !
கட்டி அணைத்து கொடுப்பதற்க்கு !
ஊட்ட உணவு ஒன்றுமில்லை
"ஒ" வென்று அழ தெம்புமில்லை !
"ஒ" வென்று அழ தெம்புமில்லை !
மரண வலியோடு பெற்றேடுத்தும்
பசியின் வலி போக்க வழியில்லை !
பசியின் வலி போக்க வழியில்லை !
அழுது பார்த்தேன் முடியவில்லை
கண்ணீர் மட்டும் வற்றவில்லை !
கண்ணீர் மட்டும் வற்றவில்லை !
ஆறுதல் கூற வார்த்தையில்லை
அழுகை நிறுத்த வழியுமில்ல !
அழுகை நிறுத்த வழியுமில்ல !
பஞ்சம் பசிக்கு உணவளிக்க
இறைவனால் மட்டுமே சாத்தியம் !
இறைவனால் மட்டுமே சாத்தியம் !
பஞசம் பசியை போக்கி இவர்களை
பாதுகாப்பாய் ரஹுமானே !
கவிஞர். இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்