நான் ஜாகிர் நாயக் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Saturday, 23 July 2016

நான் ஜாகிர் நாயக் !













நான் ஜாகிர் நாயக் !

தாவா பணி ஒன்றே இறைவன் 
எமக்கு அளித்த அருட்கொடை
இறுதி மூச்சு வரை உறுதியாய்
வல்ல இறைவனுக்காக

திருமறையை சுமந்த எம் நெஞசம்
அதை விவரிப்பதும் பிழையின்றி

பெறுமை இன்றி பொறுமையோடு
முன்நோக்கி எம் விவாதங்கள்

ஆதாரங்களோடு எம் வாதங்கள்
எனது இறைவன் தந்த ஆற்றல்

பகவத்கீதை , பைபிள் ,வேதங்கள்
மனனம் எமக்கு !
மாற்று மத அன்பருடன் விவாதிக்க
ஒரு ஆதாரம் !

கேள்விக்கென்ன பதில் ! நிகழ்ச்சி
கேட்பவரே மாறிவிடும் நிகழ்வு 

இறைவன் ஒருவனே ! இறுதித்
தூதர் எம் பெருமானார் (ஸல்)
என்பதே எம் தாரக மந்திரம்
இதுவே ! உயிர் மூச்சும் கூட ...

உண்மையை உள்ளபடியாக
உரைப்பதே எம் பணியாக
படைத்தவனை தவிர என்னை
அடிமைபடுத்த முடியாது யாராலும்

வணக்கத்துக்குரியவன் இறைவன்
ஒருவனே அன்றி யாருமில்லை

இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்
வாதங்களால் மட்டுமா ?
இறைவன் நாடியதால் மட்டுமே !

இறைவா !
உன் மார்க்கம் வளர்க்க எமக்கு
தாக்கத்தை தந்தருவாயாக ......
ஆமீன் !

கவிஞர்:இறைநேசன்.
LikeShow More Reactions
Comment
Comments
கவிஞர். இறைநேசன்
Write a comment...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்