சுயநலக்காரன் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Tuesday, 9 August 2016

சுயநலக்காரன் !













நான்  சுயநலக்காரன்  !

நான் நானாக இருக்கிறேனா
எனக்குள் நான் கேட்டு கொள்வது !

உயர்ந்த நிலையில் நான் இன்று
என்னால் மட்டுமே சாத்தியமா ?

எல்லாம் என்னிடம் இருக்கிறது
மமதை மட்டும் கூடி உள்ளதா !

சுய அறிவோடு தான் எதையும்
செய்து கொண்டிருக்கிறேனா !

அறிவுரை ஏற்று கொள்ளும்
மன நிலையில் இல்லையா !

கேள்விகளுக்கு எல்லாம்
விடைகள், ஆம் ! என்றால் .......

நான் ஒரு சுயநலக்காரன் 
என்பது உண்மை 


பெற்றோர்கள் கொண்டே என்
பிறப்பு இந்த உலகில் !

தகப்பன் பெயரைக் கொண்டே
உலகில் என் அடையாளம் !

எல்லாம் மறந்த நிலை இன்று 
நான் சுயநலக்காரனாக உலகில் 

கவிஞர்: இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்