நல்லதொருகுடும்பம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 11 June 2018

நல்லதொருகுடும்பம் !


காசுக்காக சொந்த தகப்பனை
ஏமாற்றும் நல்ல பிள்ளைகளும்
இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு
தான் இருக்கிறார்கள் வெட்கம்
இல்லாமல் ......

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

சொத்துக்காக உடன்பிறப்புகளுக்கு
துரோகம் செய்ய நினைக்கும்
உறவுகள் சரிபங்கு தவிர்த்து
சதவீகித கணக்குகள் போடுகிறது .....

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நல்ல தலமையின் கீழ் ஒருவன்
வளர்க்கப்பட்டாலும் அவன் வேறு
பட்ட குணம் மட்டும் இறுதிவரை
மாறுவதில்லை ....

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

சகோதரன் பெயரில் அவன் நான்
தான் என்று கூறி மோசடி செய்யும்
உடன்பிறப்புகள் எல்லாம் இந்த
உலகத்தின் முன் நல்லவர்களாக
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தனிப்பட்ட மனிதனை புகழ்ந்து
யாசகம் பெற்று வாழ்வதை சிலர்
பெறுமையாக நினைப்பது ......
இது ! அவர்கள் இயலாமையை
தான் காட்டுகிறது .....

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

குடும்பத்தில் மூத்தவர்கள் தன்
இளையவர்கள் தவறு செய்யும்
பட்சத்தில் அறிவுரை வழங்குவது
கடமை !
இது தவிர்த்து அவர்களிடம் உள்ள
பணத்திற்காக உண்மையை
மாற்றி பேசுவது கூடாது ......

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

உயிரோடு இருந்த போது உன்
பெற்றோர்கள் பெயரை
காப்பாற்றி வந்ததை விட
அவர்கள் மறைவிற்கு பின்
அவர்கள் பெயரை கெடுக்காமல்
இருந்தாலே போதுமானது ......

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நீ ! அறிந்தே மற்றவருக்கு
நம்பிக்கை துரோகம்
செய்து விட்டு காலம் கடந்த
உன் மன்னிப்பு ..... இது !
அவனின் இழப்பை ஒரு
போதும் ஈடு செய்ய முடியாது
என்பதை மறவாதே ......

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

உறவுகள் முன் பாசமலர்களா
தங்களை காட்டி கொள்ளும்
இவர்கள் உலகத்தின் முன்
காகித மலராகதான் காட்சி
அளிக்கிறரார்கள் ......

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
கவிஞர். இறைநேசன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்