கண்ணுறங்கு ,
கண்ணுறங்கு
என் கண்மணியே கண்ணுறங்கு
!
பொழுதுரங்கும் நேரமிது
-- என்
பூமகனே கண்ணுறங்கு
!
உன் அழகு மை விழியில்
உண்மைகொண்ட கருவிழிகள்
பொன் அழகு நிலா நோக்க
----என்
பூ உடலே கண்ணுறங்கு
!
வட்டு கிண்ணம் பழஞ்சோறு
வான் நிலா காட்டி தாய் ஊட்ட
எட்டி அவள் கையை தட்டி
விடும்
சுட்டி சேட்டையில் கெட்டிக்காரன் !
கண்ணுறங்கு ! கண்ணுறங்கு
!
என் கண்மணியே கண்ணுறங்கு
!!
புதுக்காலை நாளை பூத்து
வரும்
பூ மகனே நீ கண்ணுறங்கு
!!
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்