தத்தளிக்கும் வாழ்க்கை ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Friday, 25 December 2015

தத்தளிக்கும் வாழ்க்கை !












தண்ணீரில்தினம் மிதக்கும்
உன் வாழ்க்கை ஓடமிதில் 


தத்தளிக்கும் காலமெல்லாம்
கடல் அலையில்

மீன் கிடைத்தால் நல்ல
சாப்பாடு உனக்கு

புயல் வந்தால் பெரும்பாடு 
உன் பொழப்பு 

கடலிலே எல்லை போட்டு
கனவுகளும் தொலைஞ்சி போச்சி

இலங்கை கடல் படையால் தினம்
செத்துமடியும் உன் உயிரும் 

விடிந்து விடும் ஒரு வழி என்று
விடியும்முன் நீ !கட்டுமரம் ஏறி 

தத்தளிக்கும் கடல் அலையில் 
விடியாத உன் வாழ்க்கை !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்