முன்னேற்றத்திற்கு "கல்வி"யை
விதைத்துவிட்டு நாங்கள் - இன்று
விதைத்துவிட்டு நாங்கள் - இன்று
முழுமையான அறுவடை "வேலை"க்கு
எதிர் கொண்ட புதிய தலைமுறைகள் !
எண்ணங்களை நிறைவேற்ற- அன்று
கடின உழைப்பு "மட்டும்" தான்
இந்த கல்லூரி எங்களுக்கு தந்த
அந்த முகவரி "பட்டம்" !
கோடிகளை கொட்டி வருடம்
பொறியாளர்கள் "உதயம் "
வேலை தேடி அலையும் எங்கள்
விழுக்காடுகள் "அதிகம் " !
நேர் காணலுக்கு நாங்கள்
செல்லும் அந்த "மகிழ்ச்சி "
கூப்பிடுகிறோம் என்ற அந்த
பதில்தான் இன்னும் "இகழ்ச்சி" !
வல்லரசு நாடு இந்தியா என்பது
வெறும் வார்த்தையில் மட்டும்
வழி மேல் விழி வைத்து
வைகறை நோக்கி இந்த
"புதிய தலைமுறைகள்" !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்