பாசம் உறவுகளை விட்டு தூரம்
அதிகமாகும் நிலை இன்று
அதிகமாகும் நிலை இன்று
நிகழ்வுகளில் மட்டுமே இந்த
பாசம் பரிவை காட்டுகிறது
கடை கோடியில்கண்டால் கூட
புன் முறுவலுடன் விடை பெறுகிறது !
அவசர உலகத்தில் உறவுகள் -இன்னும்
பாசத்தோடு உறவாட நேரமில்லை !
காரணம் ஆயிரம் சொல்லி -இங்கே
பாசம் கூறு போட படுகிறது !
உலகில் எல்லாம் கிடைத்த பிறகு
ஒரு நாள் பாசத்திற்கு ஏங்கலாம்
அன்று பணத்தை கொண்டு பாசத்தை
வாங்க முடியாது ! வேதனையை தவிர ......
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்