செல்லமாக நான் உன்னை தொட்டு விட
சிணுக்கமான உன் குரல் ஓங்கி வர !
உரிமையோடு கோபம் கொள்வேன் உன் மீது
உதிர்ந்திடாது உன் அன்பு என் மீது !
எதிர்பார்ப்பு நமக்குள்ளே ஏராளம்
முடியாத சூழ் நிலைகள் தாராளம் !
கோபம் கொள்ளும் உன் நிலை அப்போது
சமாதானம் செய்ய முடியாது உனை இப்போது !
நம் அன்புதான் இதற்க்கு ஒரு ஆதாரம்
மாறாது நம் உறவில் என்றும் சேதாரம் !
இணைத்துக்கொள் என்னை நீ இப்போது செல்லத்துக்கு ஒரு "வாக்குறுதி" தப்பாது !
கவிஞர்.இறைநேசன்.


No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்