அரபு தேசம் ! - கவிஞர். இறைநேசன்

இது கவிதைகளின் பூந்தோட்டம்

Hot

Monday, 21 December 2015

அரபு தேசம் !












பாலை மணல் கானல் நீர் காட்சி
பளிங்கு மிளிரும் கட்டிடம் சாட்சி !


பெட்ரோலியம் இந்த பூமியில் ஆட்சி
படைத்தவன் தந்தது இங்கே மாட்சி !

கடல் கடந்து பணம்தேடி அன்று
புறப்பட்டு சென்றவர்கள் இன்றும் !

வேர்வையை உழைப்பாய் கொண்டு
குடும்ப வேதனைசுடும் மணலில் உண்டு !

சின்னதாய் கிடைத்த சம்பளம் என்று
சிறப்பாய் குடும்பத்திற்கு அனுப்பி கொண்டு !

ஆயிரம் கனவுகளை அடி மனதில் சுமந்து 
வருமானம் போதாதா நிலை கொண்டு !

இருப்பதை வைத்து வாழ்ந்து கொண்டு
கனவால் மனதில் கோட்டை கட்டும்! 

தூர தேசம் இந்த அரபு தேசம் - இது 
பலருக்கும் அமைந்த வாழ்க்கை தேசம் !

கவிஞர்.இறைநேசன்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்